தனது பங்குவின் புது ரெஸ்டாரண்ட்டுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Sivakarthikeyan inaugurates Actor Soori's New Restaurant

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் - சூரியின் காமெடி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மதுரையில் நடிகர் சூரி புதிதாக அம்மன் வெஜ் ரெஸ்டாரண்ட் மற்றும் அய்யன் ரெஸ்டாரன்ட் ஆகியவற்றை தொடங்குகிறார்.

இந்த இரு ரெஸ்ட்டாரன்ட்களின் துவக்க விழா மதுரையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் ரெஸ்டாரன்ட்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.