லாரி கிளீனராக வேலை பார்த்தேன்..! சூரி Untold Stories -வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 22, 2019 03:37 PM
நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடியன்களில் ஒருவர். அவர் தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய Behindwoods தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் , சூரி தான் சினிமாவுக்கு வருவதற்கு முன் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். குடும்பத்தில் வறுமை நிலவிய நிலையில் தான் சினிமாவில் நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணி சென்னை வந்தாராம். தொடர்ந்து பலரை சந்தித்து வேலை தேடினேன், ஆனால் யாரும் வேலை கொடுக்க தயாராக இல்லை.
வீடு வாடகை கொடுக்க வேண்டும், அதனால் குப்பை மண் அள்ளும் ஒரு லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்தேன். "ஒரு முறை அம்மா என்னிடம் போனில் பேசும்போது 'சாப்பிட்டியா?' என கேட்டார். 'நான் எங்க சாப்டேன்.. பச்சை தண்ணி குடிச்சிட்டு படுத்திருக்கேன்' என கூறினேன். அவர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மயங்கி விழுந்துவிட்டார்" என சூரி கூறியுள்ளார்
லாரி கிளீனராக வேலை பார்த்தேன்..! சூரி UNTOLD STORIES -வீடியோ இதோ வீடியோ