"பிகில்" படத்திற்கு பிறகு கதிர் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் ரிலீஸ் குறித்த UPDATE!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 28, 2019 11:23 AM
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு நடிகர் கதிர், தளபதி விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்திருந்தார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து அவர் நடிக்கும் படம் 'ஜடா'. இந்த படத்தை போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ளார். குமரன்.ஏ இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, யோகி பாபு, ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது
Happy Diwali !! #Jada December Release!! pic.twitter.com/s227URa22u
— kathir (@am_kathir) October 27, 2019