பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறாரா கஸ்தூரி ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 12:14 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழச்சி பார்வையாளர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக கவின் , சாக்ஷி, லாஸ்லியா ஆகியோருக்கு இடையே நிகழும் காதல் விவகாரங்கள் அனல் பறக்கின்றன.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி வெளியேறுவார் அல்லது சீக்ரெட் ரூமிற்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை தான் தெரிய வரும்.
இதனையடுத்து நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார். அதில், போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க.
எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்'' என்று அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 1, 2019