சர்வதேச அளவில் கவனம் பெற்ற பார்த்திபனின் ஒத்த செருப்பு - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 05, 2019 09:26 PM
நீண்ட இடைவேளைக்கு இயக்குநர் பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார்.

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த குளிருதா புள்ள பாடல் இணையத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்றை பெற்றது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாட, விவேக் எழுதியுள்ளார்.
இந்த படத்துக்கு சத்யா பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படம் சிங்கப்பூர் சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
proud moment! pic.twitter.com/Y12pGx8fT5
— R.Parthiban (@rparthiepan) August 5, 2019