கார்த்தியும் தளபதி 64 இயக்குநரும் இணைந்துள்ள 'கைதி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 25, 2019 06:34 PM
டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்துக்கு அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குநராக பணிபுரிகிறார். இந்த படத்தில் நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் 64வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று ( ஆகஸ்ட் 24) வெளியானது குறிப்பிடத்தக்கது.
#Kaithi #கைதி #OctoberRelease pic.twitter.com/EXQ51FeIdB
— S.R.Prabhu (@prabhu_sr) August 25, 2019