''அவன் கோழியையும் மேய்ப்பான், குஞ்சையும் பார்ப்பான்'' - கவின் குறித்து மனோபாலா நக்கல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 01, 2019 12:00 PM
தமிழக மக்கள் மத்தியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஹாட் டாபிக். பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சேரன் - மீரா விவகாரம், சரவணனின் கமெண்ட் என என பிக்பாஸ் வீடு நாளுக்கு நாள் கன்டென்ட் வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குநரும் காமெடி நடிகருமான மனோபாலா பிக்பாஸ் குறித்து Behindwood TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றி தன் கருத்தை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. அவன் கோழியையும் மேய்ப்பான் குஞ்சையும் பார்ப்பான் என்பது போல இருக்கிறது. அது வேற கேம் ஸ்டார்ட் ஆகுது. ஒதுங்கு ஒதுங்குனு சொன்னவுடன் ஒதுங்குறான். அப்புறம் நடுவழியிலயே தூக்கிடுவாங்க போலயே என்று ஒதுங்கியிருக்கான் என்று தெரிவித்தார்.
''அவன் கோழியையும் மேய்ப்பான், குஞ்சையும் பார்ப்பான்'' - கவின் குறித்து மனோபாலா நக்கல் வீடியோ