''நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால்...'' - ரோபோ ஷங்கர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 11:39 AM
தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்வுகளில் முக்கியமானது பிக்பாஸ். பிக்பாஸில் தற்போது முக்கோண காதல் கதை தான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகர் ரோபோ ஷங்கர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு பிக்பாஸ் போக வேண்டும் என்று ஆசை. ஆனா பத்து மணிக்கு போய், 4 மணிக்கு வெளியே வந்துடுவேன்.
ஏன்னா அதுக்கு மேல நம்மளால அங்க இருக்க முடியாது. அது விஜய் டிவிக்கும் நன்றாக தெரியும். சாண்டி வெற்றி பெறுவார் நினைக்குறேன். அவர் எங்க இருந்தாலும் அந்த இடம் கலகலனு இருக்கும் என்று தெரிவித்தார்.
''நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால்...'' - ரோபோ ஷங்கர் அதிரடி வீடியோ
Tags : Robo shankar, Bigg Boss 3, Sandy