www.garudabazaar.com

"வலிமை வில்லனா?".. பிரபல நடிகரின் வீட்டில் விசேஷம்... Viral ஆகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படம் தொடர்பாக தயாரிப்பாளர்களிடமிருந்து புதிய அப்டேட்டை பெற அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தான் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் என அடுத்தடுத்த விருந்தாக அப்டேட்கள் வெளிவந்தன.

KarthikeyaGummakonda engagement viral is he acting in valimai

அதன்படி எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாரி எனும் முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. விக்னேஷ் சிவன் எழுதிய, இந்த பாடலை யுவன் மற்றும் அனுராக் குல்கர்னி பாடியுள்ளனர்.

இதனை அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தின் 2வது பாடல் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், வலிமை படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வரும் நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட் தெலுங்கு படமான RX100 மூலம் புகழ் பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா வலிமை படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. எனினும் இந்த தகவலின் உண்மைத் தன்மை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தான் கார்த்திகேயா கும்மகொண்டா தமது நிச்சயதார்த்தம் குறித்து மணமகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்க்கைத் துணையாகப் போகும் என் சிறந்த தோழியுடன் இப்போது என் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 2010-லிருந்து நான் லோஹிதாவை நித்வாரனகலில் முதன்முதலில் சந்தித்தபோதில் இருந்து இப்போது வரை.. இன்னும் பல தசாப்தங்களுக்கு..” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: செம்ம.. கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயனா? தெறிக்குதே! என்ன சொல்லிருக்காரு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

KarthikeyaGummakonda engagement viral is he acting in valimai

People looking for online information on Ajith Kumar, Kartikeya Gummakonda, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.