www.garudabazaar.com

#NaangaVeraMaari தல அஜித்-ன் #ValimaiFirstSingle வெளியான கையோடு அடுத்த 'தெறிக்கவிடும்' அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கும் திரைப்படம் 'வலிமை'. போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

after ValimaiFirstSingle NaangaVeraMaari final shoot update

முன்னதாக தல அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கிய ('பிங்க்' படத்தின் ரீமேக் திரைப்படமான) 'நேர்கொண்ட பார்வை', 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்திருந்தார். இதனை அடுத்து, இந்த ஹிட் காம்போவின் உருவாக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படமே 'வலிமை'.

after ValimaiFirstSingle NaangaVeraMaari final shoot update

'வலிமை' படத்தின் first look போஸ்டர் அண்மையில் வெளியாகி நீண்ட நாட்களாக வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. இந்த நிலையில், வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடலாக, 'நாங்க வேற மாரி' என தொடங்கும் பாடல் நேற்று (02.08.2021) இரவு 10.45 மணிக்கு வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை, யுவன் ஷங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர்.

after ValimaiFirstSingle NaangaVeraMaari final shoot update

இந்நிலையில் வரும் ஆகஸ்டு 6-ஆம் தேதி முதல் வலிமை படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஷ்யாவில் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்புக்காக வரும் ஆகஸ்டு 4-ஆம் தேதி இரவு அஜீத் மற்றும் படக்குழுவினர் ரஷ்யா புறப்படுவதாகவும், ஆகஸ்டு 10-ஆம் தேதி இந்தியா திரும்புவதாகவும் தெரிகிறது.

இதனிடையே 'தல' அஜித் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் (03.08.2021) 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM, #29YrsOfInvincibleTHALA என்ற ஹேஸ்டேக்களை உருவாக்கி ட்விட்டரில் Trend செய்து வருகின்றனர்.

ALSO READ:  "போடு வெடிய!!".. "அட்லீ - ஷாருக் - நயன்தாரா" இணையும் பாலிவுட் படம்!.. வெளியான LATEST அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

after ValimaiFirstSingle NaangaVeraMaari final shoot update

People looking for online information on Ajith Kumar, AjithismTrendOnAug2, H Vinoth, NaangaVeraMaari, ThalaAjith, Valimai, ValimaiUpdate will find this news story useful.