www.garudabazaar.com

'வலிமை' 2-வது சிங்கிள் ரெடி ஆயிடுச்சா?... பிரபல இயக்குநர் தந்த வேறமாரி அப்டேட்! தீயாய் பரவும் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 'தல' அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை.

ajith valimai yuvan 2nd single ready venkat prabhu video

இந்த திரைப்படத்தின் நிறைவு கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன.

குறிப்பாக தல அஜித் பைக் ரேசர் போல உடையணிந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் சரி, அதன் பின் வெளியான ‘நாங்க வேற மாரி’ என்கிற முதல் சிங்கிள் பாடலும் சரி, நீண்டநாள் வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வந்து சேர்ந்துள்ளன.

முன்னதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தல அஜித் நடிக்கும் இந்த வலிமை திரைப்படத்தில், ஒரு குத்து பாடலும்; ஒரு அம்மா சென்டிமென்ட் பாடலும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி ‘நாங்க வேற மாரி’ பாடல் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகி வெளியானது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, வலிமை படத்தின் அடுத்த பாடல் பணிகளை தொடர்ந்துகொண்டு இருந்தார். இந்நிலையில்தான் இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றில், ரசிகர் ஒருவருக்கு வலிமை அப்டேட் தருகிறார்.

அதில், “வலிமை படத்துக்கான இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் ஷங்கர் ராஜா தயார் செய்துவிட்டார்,அந்த பாடல் விரைவில் வந்துகொண்டே இருக்கிறது!” என்று செம மாஸ் அப்டேட் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை தல ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு அண்மையில்தான் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகிறது என்றும் அதே வீடியோவில் வெங்கட் பிரபு குறிப்பிடுகிறார். இயக்குநர் வெங்கட் பிரபு தல அஜித்தின் நடிப்பில் ‘மங்காத்தா’ எனும் வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

Also Read: ரஜினியின் "அண்ணாத்த" .. அடுத்த கட்ட ஷூட் எங்கே? எப்போ? .. விசில் பறக்கும் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

ajith valimai yuvan 2nd single ready venkat prabhu video

People looking for online information on Ajith Kumar, Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.