www.garudabazaar.com

LATEST : வேற மாரி மாஸ்! யுவனின் வெறித்தனம்! தல ரசிகர்களுக்கு செம விருந்து! வலிமை First Single ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் - யுவன் - நிரவ் ஷா முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது. 

Naanga vera maari valimai movie first single released

ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சுமார் 181 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.

Naanga vera maari valimai movie first single released

பின்னர் இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது. வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Naanga vera maari valimai movie first single released

தல அஜித் திரையுலகுக்கு வந்து நாளையுடன் (03.08.2021) 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM, #29YrsOfInvincibleTHALA என்ற ஹேஸ்டேக்களை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த 29வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் 'நாங்க வேற மாரி' என தொடங்கும் சிங்கிள் பாடல் இன்று (02.08.2021) இரவு 10.45 மணிக்கு வெளியானது. 

Naanga vera maari valimai movie first single released

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

தல அஜித்தின் பழைய படங்களை நினைவுபடுத்துவது போல குறிப்பாக பில்லா, விஸ்வாசம், ஆரம்பம் படங்களின் சாயலில் இந்த பாடல் அமைந்துள்ளது.

தல அஜித் அடிக்கடி கூறும் குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு போன்ற ரசிகர்களுக்கு அறிவுரைக்கூறும் வாசகங்களும் இந்த பாடலில் அமைந்துள்ளன. 

 

LATEST : வேற மாரி மாஸ்! யுவனின் வெறித்தனம்! தல ரசிகர்களுக்கு செம விருந்து! வலிமை FIRST SINGLE ரிலீஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Naanga vera maari valimai movie first single released

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai, Vignesh shivan, Yuvan Shankar Raja will find this news story useful.