www.garudabazaar.com

செம்ம.. கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயனா? தெறிக்குதே! என்ன சொல்லிருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் வெகுஜன மக்களிடையே மிகவும் ரீச் ஆனார்.

Sivakarthikeyan Goundamani viral pic சிவகார்த்திகேயன் கவுண்டமணி

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படமான ‘டான்’ திரைப்படத்தை இயக்கும் சிபி சக்ரவர்த்தி, இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

Sivakarthikeyan Goundamani viral pic சிவகார்த்திகேயன் கவுண்டமணி

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Sivakarthikeyan Goundamani viral pic சிவகார்த்திகேயன் கவுண்டமணி

முன்னதாக கேஜேஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரல் ஆகிறது.

இந்த புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “லெஜண்ட் கவுண்டமணி சாருடன்... மிகப்பெரிய தருணம். fun மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் நாள் இது. எப்போதும் என் விருப்பமானவர்.” என குறிப்பிட்டுள்ளர்.

தனக்கே உரிய நகைச்சுவை கவுண்ட்டர்களால் தமிழ்த் திரையுலகை அசரவைக்கும் கவுண்டமணியின் படங்களுக்கும், நகைச்சுவை காட்சிகளுக்குமான ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இது புரிய அவ்ளோ கஷ்டமா?"..  என்ஜாய் எஞ்சாமி பாடகர் ‘அறிவு’-க்காக கொந்தளித்து பா.ரஞ்சித் பரபரப்பு ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Goundamani viral pic சிவகார்த்திகேயன் கவுண்டமணி

People looking for online information on Goundamani, Sivakarthikeyan, Trending will find this news story useful.