"என்னங்க சார் உங்க சட்டம்" படத்தின் பரபரக்கும் ஃபர்ஸ்ட் லுக்!.. என்ன கதை தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர்கள் படத்தின் கதையின் மைய கரு குறித்த பெரும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது. இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு, இந்த படம் எப்படி இருக்கும் என்கிற பெரும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.
தயாரிப்பாளர்கள் இப்படத்தினை தமிழில் ஒரு புதிய “Duplex” வகை படம் என்று கூறியுள்ளனர். அப்படியென்றால் இந்த படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை தீவிரமாக சொல்வதாக இருக்கும். இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் ரோகினி, R.S.கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால் மற்றும் நக்கலைட்ஸ் தனம் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் என படக்குழு உறுதியாக நம்புகின்றனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்றபோவது இல்லை, முதலில் வைக்கப்பட்ட அதே பெயரில் படத்தினை வெளியிட போகிறார்கள்.
அதே சமயம் படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும் என படக்குழு உறுதியாய் கூறுகிறார்கள். இந்த கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும். இயக்குனர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார்.
அஷோக் குமார் இயக்கத்தில் வெளியான ‘பீச்சாங்கை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த R.S.கார்த்திக், தான் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற வித்தியாசமான ஃபேண்டசி கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாகி 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்திருந்த R.S.கார்த்திக், இந்த படத்தைத் தொடர்ந்து “என்னங்க சார் உங்க சட்டம்” படத்தில் நடிப்பது பலரிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கும்பகோணம் மற்றும் சென்னையை சுற்றிய பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடத்தபட்டுள்ள இந்த படம் ஹீரோ-ஹீரோயின்-வில்லனை மையப்படுத்தி நகரும் படமாக இருக்காது என படக்குழு கூறியுள்ளது.
படத்தின் இசை, ட்ரெயிலர் மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றி Passion Studios விரைவில் அறிவிக்கவுள்ளனர். Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு குணா பாலசுப்ரமணியம் இசையமைக்க, அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்ஷனா, ஸ்வேதா ராஜூ ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Penguin - Videos
- Penguin | Full List Of Films Releasing On OTT, With Release Dates - Slideshow
- Penguin (Tamil) - Videos
- "Pickpocketing Is An ART" - R S Karthik & Ashok | Peechaankai
- Peechaankai Review | Left Is Right
- Peechaankai Movie Review
- Peechaankai | 8 FILMS IN 2017 THAT DESERVED MORE RECOGNITION - Slideshow
- Peechaankai - Photos