Viruman Logo Top
www.garudabazaar.com

ரசிகர்களுடன் சேர்ந்து 'விருமன்' படம் பார்த்த விஜய் மனைவி சங்கீதா.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தை நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கண்டுகளித்துள்ளார்.

Vijay wife Sangeetha watched Viruman Movie in Chennai

Also Read | இது வேற லெவல்! பெங்காலி மொழியில் சாய் பல்லவி நடித்த தமிழ்ப்படம்.. சூப்பர் சம்பவம்!

சூர்யா- ஜோதிகாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழகம் முழுவதும் காலை 6:30 மணி முதல் முதல் காட்சி திரையிடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆராவாரத்துடன் முதல் காட்சி திரையிடப்பட்டது.

Vijay wife Sangeetha watched Viruman Movie in Chennai

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் விஜய் மனைவி சங்கீதா மற்றும் இயக்குனர் ஷங்கரின் குடும்ப உறுப்பினர்கள் மற்ற திரை பிரபலங்கள் விருமன் படத்தை பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

Vijay wife Sangeetha watched Viruman Movie in Chennai

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Vijay wife Sangeetha watched Viruman Movie in Chennai

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.  இந்த படத்தின் கேரள வினியோக உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான Fortune சினிமாஸ் கைப்பற்றியுள்ளது.

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

ரசிகர்களுடன் சேர்ந்து 'விருமன்' படம் பார்த்த விஜய் மனைவி சங்கீதா.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay wife Sangeetha watched Viruman Movie in Chennai

People looking for online information on Karthi, Vijay wife Sangeetha watch Viruman Movie, Viruman will find this news story useful.