www.garudabazaar.com

"தொட்டாலே TREND தான்".... கார்த்தி -யின் 'சர்தார்' டிரெய்லர்.. இந்த தீபாவளில டபுள் ஆக்சன் ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான சர்தார் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Karthi Starring Sardar Movie Trailer Released

Also Read | விஜய் ரசிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி சொன்ன சூப்பர் தகவல்! தியேட்டர் தெறிக்க போகுது

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Karthi Starring Sardar Movie Trailer Released

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Karthi Starring Sardar Movie Trailer Released

படத்தின் ரிலீஸை ஒட்டி சர்தார் படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ளது போல் டிரெய்லர் காட்சிகள் வெளியாகி உள்ளன. பப்ளிசிட்டி விரும்பும் காவல்துறை அதிகாரியாக ஒரு பாத்திரத்திலும், உளவாளியாக ஒரு பாத்திரத்திலும் கார்த்தி டிரெய்லரில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

 

Also Read | கன்னடத்தில் பட்டைய கிளப்பும் 'காந்தாரா'.. படம் பார்த்த பின் நடிகர் தனுஷ் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Starring Sardar Movie Trailer Released

People looking for online information on Karthi, Sardar, Sardar Movie Trailer will find this news story useful.