www.garudabazaar.com

விஜய் ரசிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி சொன்ன சூப்பர் தகவல்! தியேட்டர் தெறிக்க போகுது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நடன இயக்குனர் ஜானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Jani Master About Thalapathy Vijay Varisu Movie Fans Excited

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம்.. இணைந்த பிரபல தமிழ் காமெடி நடிகர்! இவரா? ஜாலி தான்

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Jani Master About Thalapathy Vijay Varisu Movie Fans Excited

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Jani Master About Thalapathy Vijay Varisu Movie Fans Excited

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Jani Master About Thalapathy Vijay Varisu Movie Fans Excited

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " தளபதி விஜய் சார் ரசிகர்களே.. என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாஸ் லெவல் நடனத்தைக் காண தயாராக இருங்கள். தியேட்டரில் ஒருவர் கூட இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க மாட்டீர்கள். தீயா இருக்கும்". என ஜானி முகநூலில் பதிவிட்டுள்ளார். ஜானி மாஸ்டர் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

 

Also Read | BREAKING: விஜய் நடிக்கும் வாரிசு.. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த இடத்துலயா? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Jani Master About Thalapathy Vijay Varisu Movie Fans Excited

People looking for online information on Jani Master, Thalapathy Vijay, Varisu, Varisu Movie updates, Vijay will find this news story useful.