www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் "சர்தார்".. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Karthi Starring Sardar Tamil Telugu Trailer Release Update

Also Read | சசிகலா உறவினர் தியேட்டரில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த ஆளுநர்! வைரலாகும் PHOTOS

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விருமன்'. இந்த விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  'சர்தார்' படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Karthi Starring Sardar Tamil Telugu Trailer Release Update

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Karthi Starring Sardar Tamil Telugu Trailer Release Update

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்  கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  படநிறுவனம் அறிவித்துள்ளது.

Karthi Starring Sardar Tamil Telugu Trailer Release Update

சில நாட்களுக்கு முன்  சர்தார் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்தார் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. போஸ்டரில் கார்த்தி தாடியுடன் சிலுவை அணிந்து இடது பக்கம் இருள் சூழ்ந்தும் வலது பக்கம் வெளிச்சம் பாயந்தும் கார்த்தியின் தோற்றம் அமைந்துள்ளது.

Also Read | "லட்ச லட்சமா சம்பாதிச்ச மனுசன.. இப்படி பாத்திரம் கழுவ".. G.P முத்துவை கலாய்த்த அமுதவாணன்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Starring Sardar Tamil Telugu Trailer Release Update

People looking for online information on Karthi, Sardar, Sardar Trailer Release Updates will find this news story useful.