'தீபாவளி சரவெடி...' - இந்த தீபாவளி ரிலீஸ் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் 'கைதி'. டிரீம்  வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

Karthik Subbaraj Comments about Karthi and Lokesh Kanagaraj's Kaithi

இந்த படத்தில் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் எஸ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கைதி' செம படம். நான் கொஞ்சம் தாமதாமாக சொல்லியிருக்கலாம். திரையரங்கில் தீபாவளி சரவெடி உணர்ந்தேன். லோகேஷ் கனகராஜ் சார், கார்த்தி சார் மற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணி செய்துள்ளீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.