Breaking: கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த தகவல் - ஹீரோ யார் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 21, 2019 12:35 PM
'பேட்ட' படத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒய்நாட் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் சார்பாக 'மேயாத மான்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து ஸ்டோன் பெஞ்ச்சின் மூன்றாவது கீர்த்தி சுரேஷ் நடிபப்பில் பென்குயின் என்ற படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதனையடுத்து ஸ்டோன் பெட்ச் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தில் வைபவ், நட்பே துணை பட நடிகை அனகா உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.
இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் வீரப்பன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 22) காரைக்குடியில் நடைபெறவிருக்கிறது.