தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் கார்த்தியின் 'கைதி' பட புரோமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 22, 2019 05:58 PM
'மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் 'கைதி'. டிரீம் வாரியர்ஸ் சார்பாக இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் தயாரித்துளளனர்.

இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25 ஆம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீஸிற்கு முன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
The Rush, The Chase, The Search, The Trust and The Hope!
Will #Kaithi win against all odds?
Witness in theatres this Friday #KaithiFromOct25 #KaithiDiwali pic.twitter.com/k7E2xuvoqj
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 22, 2019