சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன்..? - ‘ஹீரோ’ படத்தின் Second Look போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan's Hero film second look poster released

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதைத் தொடர்ந்து ‘ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.