‘தமிழ் ராக்கர்ஸ்கிட்ட இருந்து தப்புமா..?’ - ‘பிகில்’ பைரசி குறித்து தயாரிப்பாளர் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 22, 2019 05:26 PM
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸில் திரைப்படம் ரிலீசாவதை தடுப்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ் வீடியோவில் பதிலளித்தார்.
அப்போது, ரசிகர் ஒருவர் ‘தமிழ் ராக்கர்ஸில் பிகில் படம் ரிலீசாவதை எப்படி தடுப்பீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நீதிமன்றம் மூலம் தடை வாங்கியிருப்பதாகவும், பைரசி லிங்க் பரவுவதை தடுக்க சில தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறினார். மேலும், அனைவரும் தங்களது கடின உழைப்பை திரையரங்கில் வந்து பார்த்து ரசிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
‘தமிழ் ராக்கர்ஸ்கிட்ட இருந்து தப்புமா..?’ - ‘பிகில்’ பைரசி குறித்து தயாரிப்பாளர் பதில் வீடியோ