மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணையும் சூர்யா ? - கார்த்தி வெளியிட்ட தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 21, 2019 12:52 PM
‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘சூர்யா 39’ திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவலை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘கைதி’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதையொட்டி, ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘கைதி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி, சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘சூர்யா 39’ திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார். இதனால், சூர்யாவின் ‘சூர்யா 39’ படத்திற்காக தனது வெற்றி இயக்குநரான ஹரியுடன் சூர்யா இணையவிருப்பதாக தெரிகிறது.