ஆக்‌ஷன் மோடிலும் ரொமான்ஸில் அசத்தும் விஷால் - வீடியோ பாடல் ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ள ‘கண்ணே கண்ணே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Kanne Kanne video song from Vishal's Ayogya has been released

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் காதல் பாடலான ‘கண்ணே கண்ணே’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் மோடிலும் ரொமான்ஸில் அசத்தும் விஷால் - வீடியோ பாடல் ரிலீஸ்! வீடியோ