இயக்குநராக அறிமுகமாகும் கவுதம் மேனனின் இசையமைப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும்  Mr.X பிரபலமுமான தர்புகா சிவா தற்போது இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.

Gautham Menon's ENPT Music Composer Darbuka Siva turns director

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த தர்புகா சிவா தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் வெளியாகி செம வைரலான நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் சர்ப்ரைஸாக வைத்திருந்தது.

மேலும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இசையமைப்பாளர் Mr.X யார் என ரசிகர்களின் ஆர்வதை தூண்டும் வகையில் புரொமோஷன்கள் செய்யப்பட்ட பின், தர்புகா சிவா தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’, ‘பலே வெள்ளைய தேவா’ ஆகிய திரைப்படங்களுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநராக தர்புகா சிவா அறிமுகமாகும் திரைப்படத்தை சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இதன் டைட்டில் மற்றும் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.