www.garudabazaar.com

நேத்துவரை மாவு விற்ற கண்ணம்மா... இப்ப எடுத்த புது அவதாரம்.. இது வேற மாரி.. அதிர்ந்த பாரதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா தொடரில் வரும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய கதாபாத்திரங்கள் தான், சீரியலை பொறுத்தவரை பலரின் ஃபேவரைட்டாக உள்ளது.

kannamma new avatar in barathi kannamma fans amazed

Also Read | “தமிழணங்கு”… “பெருமைமிகு தமிழன்”… - ஒரே post-ல் தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் & யுவன்

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளான லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோரும் தனித்தனியாக பெற்றோர்களிடம் வாழ்ந்து வருகின்றனர்..

தொடர்ந்து, சமீபத்தில் தான் தன்னுடைய தந்தை பாரதி என்பது லட்சுமிக்கு தெரிய வருகிறது. இதன் பின்னர், அவருடன் அதிக நேரம் செலவு செய்து வரும் லட்சுமி, கண்ணம்மாவை பாரதியுடன் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

புதுசு புதுசா ட்விஸ்ட் வைக்குறாங்க..

இப்படி அடுத்தடுத்து உணர்வுப்பூர்வமான மற்றும் நெகிழ்ச்சியான கதைக்களங்களுடன் பாரதி கண்ணம்மா நகர்ந்து கொண்டிருந்ததால், விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா இணைந்து விடுவார்கள் என்றே ரசிகர்கள் கருதினர். அப்படி இருக்கும் வேளையில், அடுத்தடுத்து சில ட்விஸ்ட்களும் நடக்கத தவறவில்லை. பிரபல சீரியல் நடிகரான பரத் கல்யாண், விக்ரம் என்னும் கதாபாத்திரத்தில், பாரதியின் பெற்றோர்களான வேணு மற்றும் சவுந்தர்யாவின் கல்லூரி தோழராக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார்.

kannamma new avatar in barathi kannamma fans amazed

இதற்கு அடுத்தபடியாக, வெண்பாவின் தாயாக பிரபல நடிகை ரேகாவும் உள்ளே வர, பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து அதகளம் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பாரதியை விட்டு விட்டு, தான் சொல்லும் நபரை திருமணம் செய்து கொள் என ரேகா கூறியும், அதனை கேட்காமல் பாரதியை அடைவதில் தீர்மானமாக இருக்கிறார் வெண்பா.

kannamma new avatar in barathi kannamma fans amazed

கண்ணம்மாவின் புது அவதாரம்

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், புது கெட்அப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார் கண்ணம்மா. விக்ரமின் புதிய மருத்துவமனை ஒன்றின் Chief Surgeon ஆக பாரதி நியமிக்கப்பட, இதற்கான திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாரதி மற்றும் விக்ரமுடன் சவுந்தர்யா மற்றும் வேணு ஆகியோரும் மேடையில் இருக்கின்றனர்.

kannamma new avatar in barathi kannamma fans amazed

திறப்பு விழாவிற்கான ரிமோட்டை விக்ரம், பாரதி உள்ளிட்ட அனைவரும் தேடிக் கொண்டிருக்க, அந்த ரிமோட்டுடன் கண்ணம்மா வருவதைக் கண்டு, பாரதியின் முகமே மாறிப் போகிறது. இதற்கு காரணம், Chief Surgeon ஆக பாரதி பணிபுரியவுள்ள புதிய மருத்துவமனையில், Admin Officer உடையில் கண்ணம்மா இருப்பது தான். இதனை அறிந்து, மனதுக்குள் முணுமுணுக்கவும் செய்கிறார் பாரதி.

kannamma new avatar in barathi kannamma fans amazed

இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியவுள்ளதால், இனி வரும் காட்சிகள், நிச்சயம் மிகவும் சுவாரஸ்யமான வகையில் அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "பாக்கியா சாப்பாடு குடுத்த நேரத்துல.. இன்னொரு விஷயமும் நடந்துருக்கு.." police station- ல பரபர ட்விஸ்ட்..

தொடர்புடைய இணைப்புகள்

kannamma new avatar in barathi kannamma fans amazed

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Vijay Television will find this news story useful.