www.garudabazaar.com

இந்த சீசன்லயும் பையை தூக்கிக்கொண்டு புறப்பட்ட கண்ணம்மா..!! என்ன ஆச்சு? Bharathi Kannamma 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடர் நிறைவான சூழலில், மக்கள் மத்தியில் சிறந்த தொடர் என்ற பெயரையும் எடுத்திருந்தது.

Kannamma goes out again Bharathi Kannamma Season 2 new Promo

Also Read | அப்பா குடிச்சதுனால தான் இப்படி ஆகிடுச்சா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயிலசாமி மகன்

கணவன், மனைவியாக இருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளும் அவர்களின் மகள்கள் குறித்த உண்மைகளும் இடையே வில்லியாக வரும் வெண்பாவின் பல சதித்திட்டங்கள் என ஒவ்வொரு எபிசோடுகளும் பாரதி கண்ணம்மாவை மிக விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவி இருந்தது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இருந்து தொடரும் முடிவுக்கு வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் கண்ணம்மாவாக நடித்த நாயகி வினுஷாதான் இதிலும் கண்ணம்மாவாக வருகிறார். முதல் பாகத்தைப் போல இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தின் புதிய ப்ரோமோ ஒன்று முதல் எபிசோடு சீசனுடன் தொடர்புப் படும் வகையில் அமைந்துள்ளது தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.

ஆம், இதில் பாரதியாக ரோஜா சீரியல் மூலம் பிரபலமான சிபு சூர்யன் நடிக்கிறார். அவர் சற்றே கிராமத்து மைனராக வருவதுடன், சிறு வயதில் தன் நண்பனைக் கொன்ற கண்ணம்மாவை பழிவாங்க நினைக்கிறார். அவருடைய தாயார் சௌந்தர்யாவோ அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சிக்கிறார். இன்னொரு பக்கம் உண்மையான கண்ணம்மா இறந்துபோக, ஒரு காரணத்தினால் சிறை சென்று திரும்பி வந்த சித்ரா (நாயகி) கண்ணம்மாவா போல் நடித்து தன் குடும்பத்தில் இணைந்துள்ளார்.

Kannamma goes out again Bharathi Kannamma Season 2 new Promo

இந்நிலையில்தான், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய கதாபாத்திரங்களுக்கு இடையே முரண்பாடுகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவின் படி பாரதிக்கு வந்த சம்மந்தம் கண்ணம்மாவால் நின்று போனதாக தெரிகிறது. இந்த விஷயம் கண்ணம்மாவின் தந்தைக்கு தெரியவர, அவர் கண்ணம்மாவை (சித்ரா) அழைத்து கோபமாக பேசுகிறார். இதன் காரணமாக கண்ணீருடன் இருக்கும் கண்ணம்மா பை ஒன்றை எடுத்துக்கொண்டு அனைவரும் உறங்கும் வேளையில் அந்த வீட்டிலிருந்து கிளம்ப தயாராகும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மாவின் முதல் பாகத்தில் கண்ணம்மா இப்படி பையை தூக்கிக்கொண்டு வைராக்கியமாக வீட்டை விட்டு செல்வது பெரிய அளவில் வைரலாகி இருந்தது.  இந்நிலையில் இரண்டாவது சீசனில் குற்றவுணர்ச்சி காரணமாக இந்த கண்ணம்மாவும் பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "போன டிசம்பர்ல தான் அப்பா கூட பேசுனேன்.. சண்டை போட்டு".. மயில்சாமி குறித்து உருகும் யுவன்!

தொடர்புடைய இணைப்புகள்

Kannamma goes out again Bharathi Kannamma Season 2 new Promo

People looking for online information on Bharathi Kannamma 2, Bharathi kannamma promo, Bharathi kannamma today episode will find this news story useful.