www.garudabazaar.com
iTechUS

பாரதி கண்ணம்மா சீசன் 2 -ல் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும்  பாரதி கண்ணம்மா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Sibbu Suryan Doing a Hero Role in Bharathi Kannamma 2 Deets

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | வெளியூர் கிளம்பிய இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி .. தளபதி 67 படத்துக்காகவா? வைரலாகும் Fans கமெண்ட்..

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்டியது.

ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என டிஎன்ஏ ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது.

Sibbu Suryan Doing a Hero Role in Bharathi Kannamma 2 Deets

Images are subject to © copyright to their respective owners.

  தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் வாழ பாரதி ஆசைப்பட, கண்ணம்மா தன்னுடைய மகள்களுடன் பூர்வீக கிராமத்துக்கு சென்றுவிட, கண்ணம்மாவை பாரதி தேடி பூர்வீக கிராமத்துக்கு சென்றார்.

அந்த ஊரில் பாண்டி எனும் நபர் தனக்கும் கண்ணம்மாவிற்கும் தவறான உறவு உள்ளது என்று கூறுவதால் பாரதிக்கும் பாண்டிக்கும் ஏற்படும் சண்டையில் பாரதியின் தலையில் காயம் ஏற்படுகிறது.

Sibbu Suryan Doing a Hero Role in Bharathi Kannamma 2 Deets

Images are subject to © copyright to their respective owners.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதி பழைய நினைவுகளை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகள்களுடன் பாரதியை பார்க்க வரும் கண்ணம்மாவை பார்த்து

பாரதிக்கு பழைய நினைவுகள் வர வேண்டும் என்றால் கண்ணம்மா பாரதியுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை கூறுகிறார்.

பாரதியுடன் இருக்க முடியாது என கண்ணம்மா கூறுகிறார். பின்னர் அனைவரின் வேண்டுகோளை ஏற்று பாரதியுடன் இருக்க சம்மதிக்கிறார். பாரதியின் நினைவை மீட்டெடுக்க கடந்த நாட்களில் இருந்தது போல் மாறி பாரதிக்கு பழைய நினைவுகளை கண்ணம்மா மீட்டெடுக்கிறார். பாரதிக்கு பழைய நினைவுகள் வந்துவிடுகிறது. கண்ணம்மாவின் மனமும் மாற பாரதி & கண்ணம்மாவுக்கு மீண்டும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்படுகிறது.

Sibbu Suryan Doing a Hero Role in Bharathi Kannamma 2 Deets

Images are subject to © copyright to their respective owners.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா எடுக்கும் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் "பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் என்ன பண்ணலாம்?" என்று அதன் இயக்குனர் பிரவீன் பென்னெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இச்சூழலில் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசனில் பிரபல சன் டிவி சேனலில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்த நடிகர் சிபு சூர்யன் கதாநாயகனாக நடிப்பார் என்று தகவல்கள்  உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிபு சூர்யன், சன் டிவி சேனலில் ஒளிபரப்பான அன்பே வா, கண்ணாண கண்ணே தொடரிலும் நடித்துள்ளார்.

Also Read | ’பத்துதல’ படத்தின் ’நம்ம சத்தம்’ பாடல்.. சிம்புவின் தெறிக்கும் டான்ஸ் Glimpse வீடியோ!

பாரதி கண்ணம்மா சீசன் 2 -ல் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ..? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sibbu Suryan Doing a Hero Role in Bharathi Kannamma 2 Deets

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma 2, Sibbu Suryan will find this news story useful.