www.garudabazaar.com

“சின்ன பிரேக் தான்.. திரும்பி வருவேன்.. ” ப்ரொபோஸ் பண்ணிய கையோடு கைதான வெண்பா..! Bharathi Kannamma

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், நாயகன் பாரதி டி.என்.ஏ டெஸ்ட்டை எடுத்திருந்த நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் பாரதியின் குழந்தைகள் தான் என்பதும் உறுதியானது. பாரதியின் நீண்ட நாள் சந்தேகங்கள் தீர்ந்த நிலையில், மறுபுறம் தனது அப்பா யாரென தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருந்தார் ஹேமா. அப்போது அவரிடம் நான் தான் உன் அப்பா என பாரதி கூறவும் செய்கிறார்.

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

Also Read | Anjali : “நான் அப்படி நெனைக்கல.. என் Goal அது இல்ல..!”.. பேட்டியில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி..! Exclusive

பின்னர் அனைவர் முன்னிலையிலும் கண்ணம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்கிறார். விட்டால் இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் என இதை கண்டதும் கொதித்து போகும் வெண்பா, "இந்த ரிசல்ட் உண்மையா இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல பாரதி. இது Fake. உன்ன யாரோ ஏமாத்தி இருக்காங்க. 2 தடவ Fertility Test எடுத்தே. ரெண்டு தடவையும் என்ன ரிசல்ட் வந்துச்சு. இந்த ஜென்மத்துலயே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதுன்னு. அப்புறம் எப்படி இந்த குழந்தைங்களோட DNA மேட்ச் ஆகும்?" என வெண்பா ஆவேசத்துடன் கூறினார்.

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

ஆனால் திடீரென வந்த பாரதியின் மருத்துவமனையில் 10 வருடம் முன்பு வேலை செய்த கம்பவுண்டர், 10 வருடம் முன்பு வெண்பா தனக்கு பத்தாயிரம் கொடுத்து ஒரு பலவீனமான டிஎன்ஏ சாம்பிளை மாற்றி வைத்து அந்த ரிசல்ட்டையே பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட்டாக மாற்றிக் கொடுக்க வைத்ததாக உண்மையை சொல்கிறார். பின்னர் கண்ணம்மாவை கொலை செய்வதற்கு வெண்பாவால் நியமிக்கப்பட்ட கூலிப்படை தலைவர் துர்கா, வந்து, வெண்பா தன் சித்தப்பாவை கொன்றது, கண்ணம்மா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு விஷ ஊசி போட்டு கொல்ல பார்த்தது என அனைத்தையும் சொல்கிறார்.

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

இது உண்மைகள் அனைத்தும் அறிந்த பிறகு பாரதி வெண்பாவிடம் எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்கிறார். அதற்கு வெண்பா எந்த பதிலும் சொல்லாமல் சிரிக்க தொடங்குகிறார். உடனே கடுப்பான பாரதி வெண்பாவை அடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் வெண்பாவோ முதலில் ஆசை தீர சிரித்துவிட்டு, தான் செய்த எல்லாவற்றையும் சொல்லி,  எல்லா உண்மையும் ஒப்புக்கொள்வதுடன், இத்தனைக்கும் காரணம் தனக்கு பாரதி மீதான காதல் தான் என்றும், கண்ணம்மா, ஹேமா உள்ளிட்ட அடுத்தடுத்த இடைஞ்சல்களால் தான் காண்டானதாகவும் கூறுகிறார். பின்னர் பாரதிக்கு ஐ லவ் யூ சொல்லி,   “என்னை விட இந்த உலகத்துல வேற எவளும் இப்படி லவ் பண்ண முடியாது.. மே தும்சே பியா கர்த்தா ஹூன்” என அத்தனை பேருக்கு முன்னிலையிலும் வெண்பா புரோபோஸ் செய்கிறார்.

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

மேலும் பேசியவர், கண்ணம்மாவை அத்தனை பேர் முன்னிலையிலும் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சிக்க, அப்போது வரும் போலீஸார் வெண்பாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இங்கு போலீஸாரை வரவழைத்த வெண்பாவின் அம்மா, “என் மகள் பல கொலைகளை செய்துவிட்டு, இப்போது சைகோவாகி சுற்றிக்கொண்டிருக்கிறார்” என கூறுகிறார்.

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

கைதாகி போகும்போது வெண்பா, பாரதியிடம், “இது ஒரு சின்ன பிரேக் தான்.. நான் மீண்டும் வருவேன், உன்னை விட மாட்டேன்” என சொல்லிவிட்டு போகிறார்.

Also Read | போடு.! Bigg Boss-ல் நடிகை அஞ்சலி..! உடன் இணைந்த 2 பிரபலங்கள்.. வந்ததுமே செம funப்பா.. 😍

தொடர்புடைய இணைப்புகள்

truths revealed venba arrested bharathi kannamma 2022 dec 8th

People looking for online information on Bharathi kannamma climax, Bharathi kannamma today episode, Bharathi kannammma serial today will find this news story useful.