"நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா?".. "இல்ல சார், இன்னும்".. கமல் கேள்விக்கு Asal Kolaar பதில்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன், 3 வது வாரத்தை கடந்துள்ளது.
Also Read | "நான் கோவக்காரன் சார், மோசக்காரன் கிடையாது".. விளக்கிய அசீம்.. கமல் கொடுத்த வைரல் Reply!!
கடந்த வாரம் முழுக்க டாஸ்க்கின் பெயரில் பிக்பாஸ் வீட்டில் ஏரளமான குழப்பங்கள் அரங்கேறி இருந்தது. அதிலும் குறிப்பாக, பொம்மை டாஸ்க் பெயரில் ஷெரினா கீழே விழுந்ததில் இருந்து அங்கே ஏராளமான பிரச்சனைகள் நிலவி வந்தது.
இதற்கு மிக முக்கிய காரணம், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டிருப்பார் என சிலர் கூறி வந்ததால் தான். ஷெரினாவுக்கு ஆதரவாக சிலரும், தனலட்சுமிக்கு ஆதரவாக சிலரும் பிக்பாஸ் வீட்டில் கருத்துக்ளை தெரிவிக்க தொடர்ந்து பல விவாதங்கள் அரங்கேறி இருந்தது. இப்படி பல விஷயங்கள் கடந்த ஒரு வாரத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகளுக்கும் வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி காரணமில்லை என்பதையும் குறும்படம் போட்டு உறுதி செய்த கமல்ஹாசன், அசீமின் செயலையும் கண்டித்திருந்தார்.
இதனையடுத்து, நாமினேஷன் பட்டியலில் இருந்த அசல் கோலார், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். அவர் வெளியே சென்றதால் அசீம், நிவா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் கண்ணீர் வடிக்கவும் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வெளியே வந்த பிறகு கமலுடன் அசல் கோலார் பேசும் விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. வெளியே வந்ததும் பேசிய அசல் கோலார், "நான் எதையும் யோசிக்கல. யோசிக்காமல் உள்ள போனேன் எப்படி இருக்கும்ன்னு. எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி நான் மாத்திக்குட்டேன்னு சொல்லலாம். ஏன்னா எல்லாமே நம்ம பார்வையில இருக்குறதுன்னு நம்புற ஆள் நான். எல்லாருகிட்டயும் நம்ம எப்படி நிஜமா இருந்தோம், அவங்ககிட்ட எப்படி அன்பா இருக்குறதுங்கிறத நான் பழகிக்கிட்டேன்னு சொல்லலாம் சார்" என்கிறார்.
இதன் பின்னர், பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் பயணம் செய்தது தொடர்பான வீடியோ ஒளிபரப்பானது. தொடர்ந்து பேசும் கமல், "நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா?" என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு பதில் சொன்ன அசல் கோலார், "இல்ல சார். இன்னும் பேலன்ஸ் இருக்கு. இருந்துருந்தா பண்ணி இருப்பேன். ஆனா ஓகே தான் சார். இதுவரைக்கும் பண்ணதுனால நான் ஹேப்பியா இருக்கேன்" என்கிறார்.
இறுதியல், "உங்கள ஏன் இங்க கொண்டு வந்து வெச்சு இருக்காங்கன்னு புரியலன்னு சொன்னீங்க. நான் விளக்குறத விட வெளியே போனதும் உங்க நண்பர்கள் உங்ககிட்ட சொல்லுவாங்க" என கமல் சொல்கிறார்.
Also Read | "கமல் Sir ட்ட அப்படி பேசிட்டு ஆயிஷா உக்காந்துட்டாங்க.. அவங்க எதிர்பார்த்தது இதான்" - தனலட்சுமி.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Robert Rachitha Cute Fight Sherina Solved Bigg Boss 6 Tamil
- Janany Robert About Aysha Breathing Issue Bigg Boss 6 Tamil
- Nivashini Cried In Asal Kolar Elimination Bigg Boss 6 Tamil
- Kamal Condemns Azeem In Dhanalakshmi Issue Bigg Boss 6 Tamil
- Dhanalakshmi Didnt Pull Sherina Kamal Reveals Bigg Boss 6 Tamil
- Your Influence Made Me To Do Mistake Queeny To Azeem Bigg Boss
- Dhanalakshmi Angry After Azeem Hits Her Bigg Boss 6 Tamil
- Kamal Haasan Vikram Movie 100th Day Function Details
- Amuthavanan Azeem Fight In Doll Task Bigg Boss 6 Tamil
- Amuthavanan Sherina Fight For Doll Bigg Boss 6 Tamil
- Azeem Hits Dhanalakshmi Doll Task Bigg Boss 6 Tamil
- Azeem Scolded Dhanalakshmi In Sherina Issue Bigg Boss 6
தொடர்புடைய இணைப்புகள்
- DD வயித்துல பாப்பா உதைக்குற சத்தம்? 😳 காது வச்ச கேட்ட Jiiva 🤣 Coffee With Kadhal
- 🔴LIVE: Asal OUT 💥 Aysha-வை செஞ்சி விட்ட KAMAL 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 90s Kids சாபத்துனால Eliminate ஆன Asal? 😳 Ayesha-வ வச்சு செஞ்ச Kamal 🔥 Bigg Boss Day 21 Highlights
- Asal நினைப்பாவே இருக்கு, மறக்க முடியல 🥹 சாப்பாடு, தூக்கம் இன்றி தனிமையில் அழும் Nivashini 🥺
- "Kamal Haasan കാരണം അങ്ങനെ കുറച്ച് ബുദ്ധിമുട്ട് എനിക്കുണ്ടായിട്ടുണ്ട് !!" | MG Soman's Wife Reveals
- Asal-ஐ குறிப்பிட்டு 'இச்சு கொடு' 😘 பாட்டு பாடி Niva-வை கலாய்த்த Room Mates 😍🤣 "பாவம்டி அவ" 😂
- Rachitha-கூட Robert Flirt பண்ணல.. இவரு குழந்தை மாதிரி - Friends Break Secrets
- 🔴 Eliminate ஆன Asal-அ பிரிய முடியாமல் கட்டிபுடிச்சு கதறி அழுத Nivashini 🥺 Bigg Boss
- "என்னை தப்பா காட்டாதீங்க Kamal Sir"... எதிர்த்து பேசி Shock கொடுத்த Ayesha 😳🔥
- Police இடம் சிக்கிய GP Muthu 😱 பொது இடத்துல இப்படி பண்ணலாமா? 😳 Bigg Boss
- Raja Rani 😍 கணவர் Balaji காதில் கிசுகிசுத்த மனைவி 🥰 ஆசையா சந்தனம் வச்சுவிட்டு Romantic Video 🥳
- Bigg Boss வீட்டில் இந்த வார Elimination... வெளியே போன ASAL?