"கமல் Sir ட்ட அப்படி பேசிட்டு ஆயிஷா உக்காந்துட்டாங்க.. அவங்க எதிர்பார்த்தது இதான்" - தனலட்சுமி.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.
Also Read | "நான் கோவக்காரன் சார், மோசக்காரன் கிடையாது".. விளக்கிய அசீம்.. கமல் கொடுத்த வைரல் Reply!!
கடந்த வாரம் முழுக்க டாஸ்க்கின் பெயரில் பிக்பாஸ் வீட்டில் ஏரளமான குழப்பங்கள் அரங்கேறி இருந்தது. இவை அனைத்திற்கும் குறும்படம் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பதில் சொல்லி இருந்தார் கமல்ஹாசன். அதே போல, அசீமின் செயலையும் கண்டித்திருந்தார். தொடர்ந்து, அசல் கோலாரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதனிடையே, கமல் மற்றும் ஆயிஷா ஆகியோரிடையே நடந்த உரையாடல் தொடர்பான விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
தான் முன்தினம் பேசிய விஷயங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என கமல் கூறுகிறார். அப்போது பேசும் ஆயிஷா, "மைனா, ஆயிஷான்னு சொல்லி கேட்டுருந்தீங்கல. என் தப்பு என்னன்னு எனக்கு புரியல. புரிஞ்சுக்கிட்டா தானே சார் நான் திருத்திக்க முடியும். நீங்க சொன்னது புரியல" என கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் கமல், "சம்பவ இடத்துல நீங்க இருந்தீங்களே, ஏன் கவனிக்கலன்னு தானே கேட்டேன்" என்கிறார். இதன் பின்னர் தனக்கு புரிந்ததாகவும் ஆயிஷா குறிப்பிடுகிறார். இதன் பின்னர் பேசும் கமல், "இந்த வீட்டுல முக்கியமா நடக்குற விஷயத்த கவனிக்காம இருந்துடுறீங்க. இல்ல Focus out பண்ணிடுறீங்க. அப்படி இருக்க முடியாது. ஏன்னா உங்களின் Health குறித்த அக்கறை கண்டிப்பாக பிக்பாஸ்க்கு உள்ளது. உங்களுக்கு மட்டும் இல்ல இங்க இருக்குற எல்லாருக்கும் எதுவும் ஆயிடக்கூடாது என்பதில் மும்முரமாக பிக் பாஸ் இருக்கிறார். எல்லாத்தையும் கவனித்து நன்றாக விளையாடுங்கள்" என தெரிவித்தார்.
தொடர்ந்து ரச்சிதா பொம்மையை எடுத்துக் கொண்டு ஆயிஷா போனது பற்றி கமல்ஹாசன் பேச தனது விளக்கத்தையும் ஆயிஷா கொடுக்கிறார்.
"ஷெரினாவுக்கு விளையாடணும்ன்னு இருந்துச்சு சார். உனக்கு விளையாடணும்னா என் பொம்மையை பிடிச்சுட்டு உக்காந்துரு. நான் அவுட் ஆயிடுவேன். இனிமே நான் கேமை Continue பண்ண மாட்டேன். அவ விளையாடாம இருந்தா இந்த கேமில் இருந்து வெளியேறணும் அப்படிங்கறதுனால என்னோட பொம்மையை எடுத்துட்டு உட்கார்ந்திருன்னு சொன்னேன். அதுக்கப்புறம் பாக்ஸ்ல பார்த்தா ரச்சிதா அக்காவோட பொம்மை அப்படியே கிடந்தது. அக்காகிட்ட கூட ஏன் யாரும் எடுக்கலைன்னு நான் கேட்டேன். அடுத்த கேம் ல இருந்து நான் Quit பண்ண போறேன். இந்த பொம்மையை கொண்டு போய் சேர்த்து விடலாமேன்னு" என ஆயிஷா தெரிவிக்க, "விளையாட்ட விட்டு விலகுகிறேன் என்று சொன்னதும் நீங்க என்ன செய்திருக்க வேண்டும்?" என கமல் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் ஆயிஷா, "விளையாடாமல் இருந்திருக்கணும் சார்" என்கிறார்.
ஆனால் நீங்கள் அதை செய்யாமல் இன்னும் கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என கமல் கூறியதும், "ரச்சிதா அக்கா பொம்மையை நான் அந்த Intentionல எடுக்கல. தயவு செய்து நீங்கள் என்னை அப்படி Portray பண்ணிடாதீங்க ப்ளீஸ்" என்கிறார் ஆயிஷா.
இதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்லும் கமல், "நான் எனது கேரக்டரை தான் இங்கே Portray செய்து கொண்டிருக்கிறேன். அவங்கவங்க Portrayal எல்லாருக்கும் தெரியும். நான் போர்ட்ரைட் பண்றது இல்ல எனக்கு போர்ட்ரயிட்டே வராது" என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆயிஷா குறித்து சக போட்டியாளர்களிடம் பேசும் தனலட்சுமி, "கமல்கிட்ட பேசினதுக்கு அப்புறம் ஆயிஷா உட்காந்துட்டு இருந்தா. நம்ம என்னாச்சுன்னு கேப்போம்னு உக்காந்துட்டு இருந்தா. யாருமே என்னாச்சுன்னு கேட்கல. கமல் சார் நம்மகிட்ட பேசிட்டு இருந்தனால அப்படியே நார்மல் ஆயிடுச்சு." என்றார். இதன் பின்னர் மற்ற போட்டியாளர்களும் ஆயிஷா பற்றி சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
அப்போது பேசும் ராபர்ட் மாஸ்டர், "அவள மதிக்கவே இல்ல. யாரோ சார் இந்த முகமூடியை நானே எடுத்துக்குறேன்னு கேட்டான். முடியாதுன்னு கமல் சொன்னாரு . அது நீங்க யாருக்காச்சும் குடுத்து ஆகணும்னு சொன்னாரு. ஆயிஷா வந்து நான் வெச்சுக்குறேன்னு சொன்னதும் வெச்சுக்கங்கன்னு சொல்லிட்டு அடுத்த வேலையை பாக்க போய்ட்டாரு. எவ்ளோ பெரிய அசிங்கம் அது" என்கிறார்.
Also Read | வேகமெடுக்கும் பிக்பாஸ்... தீபாவளி வெடி இப்போ வெடிக்குதே.. சரவெடி ப்ரோமோ.. !
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Janany Robert About Aysha Breathing Issue Bigg Boss 6 Tamil
- Nivashini Cried In Asal Kolar Elimination Bigg Boss 6 Tamil
- Ayesha About Doll Task Kamal Blames Azeem In Biggboss Tamil
- Dhanalakshmi Fear After Amudhavanan Ghost Prank Kamal Reacts
- Kamal Condemns Azeem In Dhanalakshmi Issue Bigg Boss 6 Tamil
- Dhanalakshmi Didnt Pull Sherina Kamal Reveals Bigg Boss 6 Tamil
- Biggboss House Myna Nandhini Ayesha And Vikraman Convo
- Azeem Nominate Dhanalakshmi As Worst Performer With Reason
- Dhanalakshmi Vomit After Luxury Budget Task Ayesha Helps
- Dhanalakshmi Angry After Azeem Hits Her Bigg Boss 6 Tamil
- Vikraman Fights For Dhanalakshmi With Azeem And Adk
- Kamal Haasan Vikram Movie 100th Day Function Details
தொடர்புடைய இணைப்புகள்
- DD வயித்துல பாப்பா உதைக்குற சத்தம்? 😳 காது வச்ச கேட்ட Jiiva 🤣 Coffee With Kadhal
- 🔴LIVE: Asal OUT 💥 Aysha-வை செஞ்சி விட்ட KAMAL 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 90s Kids சாபத்துனால Eliminate ஆன Asal? 😳 Ayesha-வ வச்சு செஞ்ச Kamal 🔥 Bigg Boss Day 21 Highlights
- Asal நினைப்பாவே இருக்கு, மறக்க முடியல 🥹 சாப்பாடு, தூக்கம் இன்றி தனிமையில் அழும் Nivashini 🥺
- "Kamal Haasan കാരണം അങ്ങനെ കുറച്ച് ബുദ്ധിമുട്ട് എനിക്കുണ്ടായിട്ടുണ്ട് !!" | MG Soman's Wife Reveals
- Asal-ஐ குறிப்பிட்டு 'இச்சு கொடு' 😘 பாட்டு பாடி Niva-வை கலாய்த்த Room Mates 😍🤣 "பாவம்டி அவ" 😂
- Rachitha-கூட Robert Flirt பண்ணல.. இவரு குழந்தை மாதிரி - Friends Break Secrets
- 🔴 Eliminate ஆன Asal-அ பிரிய முடியாமல் கட்டிபுடிச்சு கதறி அழுத Nivashini 🥺 Bigg Boss
- "என்னை தப்பா காட்டாதீங்க Kamal Sir"... எதிர்த்து பேசி Shock கொடுத்த Ayesha 😳🔥
- Police இடம் சிக்கிய GP Muthu 😱 பொது இடத்துல இப்படி பண்ணலாமா? 😳 Bigg Boss
- Raja Rani 😍 கணவர் Balaji காதில் கிசுகிசுத்த மனைவி 🥰 ஆசையா சந்தனம் வச்சுவிட்டு Romantic Video 🥳
- Bigg Boss வீட்டில் இந்த வார Elimination... வெளியே போன ASAL?