www.garudabazaar.com

"எல்லாம் ரிலாக்ஸ் ஆனதும் ஆயிஷாக்கு மூச்சுத்திணறல் வருது! எப்படி?" - ஜனனி, ராபர்ட் பேசியது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

Also Read | "நான் கோவக்காரன் சார், மோசக்காரன் கிடையாது".. விளக்கிய அசீம்.. கமல் கொடுத்த வைரல் Reply!!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

இந்த நிலையில் தற்போது ஆயிஷாவின் மூச்சு திணறல் குறித்து ஜனனி, தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் ராபர்ட் நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதில் ஜனனி, “ஆயிஷாவுக்கு தீபாவளிக்கு முன்பாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது, அதன் பிறகு விசேஷத்தின் போது ஏற்படவில்லை. இப்போது எல்லாம் முடிந்து அனைவரும் ரிலாக்ஸ் ஆகிவிட்டோம். இப்போது அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் வந்துவிட்டது. அது எப்போது எப்படி வேண்டுமானாலும் வரும் எனும் பொழுது இப்படி தன் மீது கவனம் வரும் வகையில் வருவது யோசிக்க வேண்டியதாக இருக்கிறது” என்று கூறுகிறார்.

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

அதற்கு தனலட்சுமியும் அமுதவாணனும் தீபாவளி முன்பாக வந்த மூச்சுத் திணறல் இயல்பாக வந்ததாகவே படுகிறது என்று கூறினர். இதேபோல் ராபர்ட் பேசும்போது அந்த பொண்ணு தெரிந்து பண்ணுதா தெரியாமல் பண்ணுதா என தெரியவில்லை இப்படி ஒரு விஷயம் வரும் என்றால் அதை இப்படி பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் ஆயிஷாவின் மூச்சுத் திணறல் குறித்த இந்த உரையாடல் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | "சரி விடு.. அப்டி இருக்கனும்னு தோனுச்சுனா சீக்கிரம் வெளில வா" - கதறியழுத நிவாஷினி.. தேற்றிய அசல்

தொடர்புடைய இணைப்புகள்

janany robert about aysha breathing issue bigg boss 6 tamil

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janani, Robert will find this news story useful.