bigg boss 6 tamil : "நீயெல்லாம் பொண்ணா".. தனிப்பட்ட வஞ்சகமா..? ஷெரினா விஷயத்தில் தனலட்சுமியை சீறிய அசீம்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்த டாஸ்கில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கு விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து எதிரணியில் இருக்கும் போட்டியாளர்களின் பொம்மைகளை எடுத்துக்கொண்டு சில நேரம் டால் ஹவுஸில் சென்று வைக்கவும் சில நேரம் டால் ஹவுசுக்கு செல்லாமலும் இருக்கின்றனர். அப்படி செல்லும் பொழுது சிலர் அதை தடுக்கவும் செய்கின்றனர். இவ்வாறு தடுக்கும் போது ஏற்படக்கூடிய தள்ளுமுள்ளுவில் ஷெரினா விழுந்து தலையில் அடிபட்ட சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நிவாஷினியும் விழுந்து அடிபட்டார்.
அப்போது கோபமாக வந்து தனலட்சுமி பற்றி பேசும் அசீம், “அறிவு இருக்கா? பெர்சனல் வெஞ்சன்ஸை இந்த வீட்ல காட்டாத.. நிவாஷினியையும் ஷெரினாவையும் அப்படி பிடிச்சு தள்ளிவிடுற? சொல்றேன்.. எவ்ளோ கூலா நிக்குறா பாரு... கொஞ்சமாச்சும் மனித நேயம் இருக்கணும்.. இவ்வளவு தூரம் சொல்றோம்.. எப்படி நிக்குறா.. நடக்குறா பாரு (தனலட்சுமி அங்கும்ங்குமாக பேசாமல் நடந்துகொண்டிருந்தார்.) கேம்னா ஒருவரை கொன்றுவாங்களா?” என வெடிக்கிறார்.
ஆனால் அதன் பிறகு நண்பர்கள் மத்தியில் பேசிய தனலட்சுமி தன் தரப்பு நியாயமாக, அசீம்தான் அனைவரையும் தள்ளி விட்டார் என்று வாதத்தை முன்வைக்கிறார். மேலும் அசீம் தன்னை பற்றி பேசுவதற்காக காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் பேசியவர், “இப்போது இந்த விஷயம் கிடைத்துவிட்டதால், அதை பூதாகரப்படுத்துகிறார்.
இந்த நேரத்தில் வாயை விட்டுவிடக் கூடாது என நான் அமைதியாக இருக்கிறேன். உண்மையில் அவர்தான் தள்ளிவிட்டார் அனைவரையும். ஒருவேளை நான் தள்ளிவிட்டதாக வீடியோவில் பதிவாகி இருந்தால், அது தொடர்பான குறும்படத்தை கமல் சார் போட்டு காண்பிக்கட்டும், நான் வெளியேறுகிறேன். ஆனால் அப்படி என் மீது தவறு இல்லை என்றால், பழி போட்டவர்கள் அத்தனை பேரும் எனது காலில் விழ வேண்டும். என்னை பார்த்து நீயெல்லாம் ஒரு பொண்ணா என கேட்கும் அசீமிடம், நான் திருப்பி கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?” என வெடியாக வெடித்தார்.