தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை - ''வீட்டில் உள் இருத்தல் மட்டுமே தீர்வாகாது''
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இப்படி கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்கு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் இவ்வாறு அறிவுறுத்துகின்றனர். ஆனால் அத்தியாவசிய பொருட்களான மளிகை, மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம் போல் கிடைக்கும்.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது பதிவில், ''வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது. @Vijayabaskarofl @CMOTamilNadu
— Kamal Haasan (@ikamalhaasan) March 26, 2020