Rocketry
www.garudabazaar.com

விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல'.. வீடியோ வடிவில் வெளியான முழு பாடல்! போடு ஆட்டத்த

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் இருந்து பத்தல பத்தல பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Vikram Movie Pathala Pathala Full video Song Released

Also Read | புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செம அறிவிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Vikram Movie Pathala Pathala Full video Song Released

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. 25வது நாளைக் கடந்தும்  படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vikram Movie Pathala Pathala Full video Song Released

வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடல் திரையரங்கில் வெளியான விக்ரம் படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை. இதனால் முழு வீடியோ பாடலையும் வெளியிட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜூக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது.

Also Read | ராணுவ வீரனாக தனுஷ் நடிக்கும் புதிய பீரியட் படம்.. மரண மாஸ் போஸ்டருடன் வெளியான அப்டேட்!

விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல'.. வீடியோ வடிவில் வெளியான முழு பாடல்! போடு ஆட்டத்த வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Pathala Pathala Full video Song Released

People looking for online information on Kamal Haasan, Pathala Pathala Full video Song, Vikram Movie will find this news story useful.