Rocketry
www.garudabazaar.com

துபாயில் கமல்ஹாசனை கொஞ்சிய சிறுவன்.. ஆண்டவர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

Kamal Haasan with a Child at United Arab Emirates Viral Photo

Also Read | Rocketry திரைப்படத்தில் வரும் அப்துல் கலாம் கதாபாத்திரம்.. தியேட்டரில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

அங்கு அமீரகத்தில் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. மேலும் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல் ஹாசன் அங்கு பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ஒரு புகைப்படத்தை கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு சிறுவன் கமல்ஹாசனின் தாடையை தடவி கொஞ்சுவது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. "மேலும் அவர் விக்ரம் என கூறினார். அடுத்த தலைமுறையை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி" என கமல்ஹாசன் இந்த புகைப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Kamal Haasan with a Child at United Arab Emirates Viral Photo

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் 'விக்ரம்' படம் Simply South ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

Kamal Haasan with a Child at United Arab Emirates Viral Photo

விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் தமிழக வசூலினை அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். அதன் படி விக்ரம் படம்  தமிழகத்தில் 75 கோடி ரூபாயை ஷேராக வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. 25வது நாளைக் கடந்தும்  விக்ரம் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.

Kamal Haasan with a Child at United Arab Emirates Viral Photo

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Also Read | PCOS பாதிப்புக்குள்ளான ஸ்ருதிஹாசன்.. நோயில் இருந்து மீள கடும் பயிற்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan with a Child at United Arab Emirates Viral Photo

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan with a Child at UAE, UAE, United Arab Emirates will find this news story useful.