IRAVIN NIZHAL
www.garudabazaar.com

'விக்ரம்' படத்தை ஏன் தியேட்டர்ல போய் பாக்கல? அல்போன்ஸ் புத்திரன் சொன்ன காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் விட்டுவிட்ட காரணத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் விவரித்துள்ளார்.

Alphonse Puthren about Skipping Vikram Movie at Theatres

Also Read | வேட்டி கட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வாழ்க்கை முழுவதும் இது தான்! வைரல் போஸ்ட்

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Alphonse Puthren about Skipping Vikram Movie at Theatres

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. 30வது நாளைக் கடந்தும்  படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Alphonse Puthren about Skipping Vikram Movie at Theatres

இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், விக்ரம் படத்தினை பார்த்து விட்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தில் ரசிகர் ஒருவர், "ஏன் விக்ரம் படத்தை தியேட்டர்ல போய் பார்க்கவில்லை?" என கேள்வி எழுப்பினார்.

Alphonse Puthren about Skipping Vikram Movie at Theatres

இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன், "காரணம், நான் திரையரங்கில் படம் பார்க்கச் செல்லும் போது, ​​என்னுள் இருக்கும் எடிட்டர் நான் என் வேலையை முடிக்கவில்லை என்று கூறுகிறார். பிறகு எடிட்டிங்கை முடித்ததும்.. படம் பாதியிலேயே உள்ளதாக இயக்குனர் என்னிடம் கூறுகிறார். அதனால் இயக்குனர் திரும்பி வந்து தனது வேலையை முடித்ததும்.. என்னுள் இருக்கும் கலர் கரெக்டர் எழுந்து நான் வேண்டும் என்று சொல்கிறார். கலர் கிரேடிங்கிற்கு உட்கார்ந்த பின் இப்போது என்னுள் உள்ள கலர் கிரேடர் எடிட்  நேரத்தை சரி செய்ய கூறுகிறார்.  எடிட்டிங் மோசமாக இருக்கிறது என்று என்னுள் இருக்கும் இயக்குனர் சொல்ல, இப்போது என்னுள் உள்ள எடிட்டர் அகங்காரமாக உணர்கிறார் மற்றும் பட நேரத்தை சரி செய்கிறார். எனவே இறுதியாக ஒரு நபராக நான் OTT இல் விக்ரமைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன்." என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

தற்போது அல்போன்ஸ் புத்திரன், பிரித்வி ராஜ் & நயன்தாராவை வைத்து கோல்ட் படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த கோல்ட் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சூப்பர் பாடல்கள்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren about Skipping Vikram Movie at Theatres

People looking for online information on Alphonse Puthren, Kamal Haasan, Vikram Movie will find this news story useful.