Yaanai

கமல் நடித்த ‘விக்ரம்’ பட வசனம்.. சீரியலில் பேசி கெத்து காட்டிய அஜித் பட நடிகை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் மற்றும் பலரது நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியான திரைப்படம் விக்ரம்.

Kayal chaitra speaks popular vikram movie kamal dialogue

Also Read | '96' ஆதித்யா பாஸ்கர் & Crew நடிக்கும் Meme Boys.. மீம்ஸ்ல கல்லூரி புரட்சியா.?

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில், கமல்ஹாசன் பேசும் ஒவ்வொரு பஞ்ச் வசனமும் பறக்கும்படியாக இருக்கும். குறிப்பாக ஒரு இக்கட்டான சூழலில் வீரர்கள் சொல்லும் ஒரே வார்த்தை, ‘பாத்துக்கலாம்’ என்பதுதான் என்று கமல் ஓரிடத்தில் பேசும் வசனம் இன்னும் பிரபலம்.

இந்த வசனத்தை தான் பலரும் இப்போது தங்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தையாக எடுத்துக்கொண்டுள்ளனர். அதிலும் சீரியல் வரை இந்த வசனம் வந்துள்ளது. இந்த நிலையில் சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இந்த வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த சிரீயலில் கயல் என்கிற பெயரில் நடிகை சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Kayal chaitra speaks popular vikram movie kamal dialogue

முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி, அதன் பிறகு வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய காட்சிகளில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் சைத்ரா ரெட்டி, இந்த சீரியல் கதைப்படி தன் தலைமையில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

Kayal chaitra speaks popular vikram movie kamal dialogue

இந்த திருமணத்திற்கு பல தடங்கல்கள் வருகின்றன. பல பேர் திருமணத்தை தடுக்கவும் கெடுக்கவும் முயற்சித்து வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி, சமாளித்து திருமணத்தை நடத்துவதற்கான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் கயல்.

Kayal chaitra speaks popular vikram movie kamal dialogue

இது தொடர்பான முக்கிய எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த தடைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அவரிடம் வந்து மணப்பெண் கேட்க, அதற்கு சைத்ரா ரெட்டியோ,  “இந்த மாதிரி நேரத்துல ஒன்னே ஒன்னு தான் சொல்லணும்.. வா பாத்துக்கலாம்!” என்று விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் பேசும் அதே தொனியில் பேசி அதே துணிவில் கெத்தாக நடை போடுகிறார். சீரியல் ரசிகர்களிடையே மெய்சிலிர்க்க வைக்கும் இந்த தருணங்கள் அடங்கிய காட்சிகள் பிரத்தியேகமாக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கின்றன.

Also Read | இசை அமைப்பாளராகும் இயக்குநர் மிஷ்கின்.. படத்துக்கு டைட்டில் இதான்..! முழு விபரம்.!

மேலும் செய்திகள்

Kayal chaitra speaks popular vikram movie kamal dialogue

People looking for online information on Kayal chaitra reddy, Kayal new promo, Kayal serial today episode, Kayal Special marriage episode, Valimai chaitra reddy will find this news story useful.