சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தையடுத்து விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தில் அக்ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹாசனும் நடித்துள்ளனர். மேலும், பூஜா குமார், லீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீனினாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் எடிட்டிங்கும் செய்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசர் கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சேசிங் காட்சிகளுடன் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான டிரைலரை விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை.19ம் தேதி வெளியாகும் என்று நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடாரம் கொண்டான் - சீயான் விக்ரமின் அதிரடி ஆக்ஷன் டிரைலர் இதோ வீடியோ