www.garudabazaar.com

ரிலீஸ்க்கு முன்பே சகுந்தலம் படம் பார்த்த சமந்தா & தில்ராஜூ.. வைரல் பதிவு 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் இணைந்து சகுந்தலம் திரைப்படத்தை  ரிலீஸ்க்கு முன் பார்த்துள்ளார்.

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

Images are subject to © copyright to their respective owners.

Also Read | RRR நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய KGF யஷ் மகன் 😍 செம்ம வீடியோ

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் இணைந்து நடிகை சமந்தா சிறப்பு திரையிடலில் கண்டு களித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " இறுதியாக இன்று நான் சகுந்தலம் திரைப்படத்தைப் பார்த்தேன்! இயக்குனர் குணசேகர் அவர்களே.. உங்களுக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. என்ன ஒரு அழகான படம்! எங்களின் மிகப் பெரிய காவியங்களில் ஒன்று. மிகவும் உயிரோட்டம் நிரம்பி உள்ளது! எங்கள் குடும்ப பட ரசிகர்கள், சக்தி வாய்ந்த உணர்ச்சிகளால் அடித்துச் செல்லப்படும் வரை என்னால் காத்திருக்க முடியாது!

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

Images are subject to © copyright to their respective owners.

திரையரங்குகளில் நீங்கள் அனைவரும் குழந்தைகளாக மாற போகிறீர்கள்... எங்கள் மாயாஜால உலகத்தை நீங்கள் விரும்பப் போகிறீர்கள்! தில் ராஜு காரு மற்றும் நீலிமா... இந்த அற்புதமான பயணத்திற்கு நன்றி   🏻🤗" என சமந்தா பதிவிட்டுள்ளார்.

சமந்தா, தெலுங்கில்  'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார்.

Also Read | Leo லுக்கில் விஜய்.. "எல்லாத்துக்கும் நன்றி".. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த லேட்டஸ்ட் bts போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu tweet about Shakuntalam movie Premiere Show

People looking for online information on Dil Raju, Samantha, Samantha ruth prabhu, Samantha Ruth Prabhu tweet, Shakuntalam, Shakuntalam movie will find this news story useful.