பட்டைய கிளப்பும் சேனாபதி: கமல்ஹாசனின் இந்தியன் 2விலிருந்து ஆக்சன் அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 23, 2019 11:56 AM
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் சார்பாக, சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்

இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத், வித்யூத் ஜாம்வால், விவேக் டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமல் இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போத வேகமாக நடந்து வருகிறது. .
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போபால் நகரில் சுமார் 2,000 துணை நடிகர்களுடன் நடைபெற்றுவருகிறது. இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து வருகிறார்