www.garudabazaar.com

இந்தா வந்துருச்சுல்ல... BiggBoss சீசன் 5 ஒளிபரப்பு தேதி!.. இனி ரகளைதான்.. வெளியான ’அடடே’ ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் சென்சேஷனலாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ.

Kamal Haasan BiggBoss5 new promo with streaming date vijay tv

இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.  இது தொடர்பாக முன்னதாக வெளியான ப்ரோமோவில், ஒரு திருமண விசேஷ வீட்டுக்குள் அமைதியாய் தொடங்கி கலகத்தில் முடியும் குடும்ப சண்டை காட்டப்பட்டது.

இதனை அடுத்து வெளியான ப்ரோமோவில், பெட்ரூமில் இருக்கும் கமலுக்கு யாரோ புரளி பேசுவது கேட்க, “யாரது.. யாரது கிசுகிசுனு பேசுறது?” என்று கேட்பது போல் முடியும். இந்நிலையில் தான் புதிய ப்ரோமோ தற்போது அடடே என்று சொல்லும் வகையில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹவுஸ்மேட்ஸ் எனப்படும் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் உலகின் பிற தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு இந்த வீட்டில் தங்குவார்கள். இவர்களில் வாரம் 2 பேர் சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட நாமினேஷன் செய்யப்படுவார்கள். வெற்றியளரின் வெற்றியை பொதுமக்களின் வாக்கெடுப்பு தீர்மானிக்கும்.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் 19 போட்டியாளர்களும்,  சீசன் 2, சீசன் 3 மற்றும் சீசன் 4 ஆகியவற்றில் 17 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.  முதல் சீசன் 98 நாட்களும், 2,3,4 ஆகிய சீசன்கள் 105 நாட்களும் நடந்தன. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், 2வது சீசனில் ரித்விகா, 3வது சீசனில் முகேன் ராவ், 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றனர்.

பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில்,  இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதிக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன் ஒரு கண்ணாடி முன்பு போய் நின்று வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஒத்திகை செய்து பார்க்கிறார்.  “அடடே.. வாங்க வாங்க..” என்று பேசி பார்க்கிறார். இதையே பல்வேறு மாடுலேஷன்களில், பல்வேறு பாடி லாங்குவேஜில் பேசி பார்க்கிறார்.

இறுதியாக அவரே,  “ஏன் இப்படி எல்லாம் என்று கேட்கிறீர்களா? நான் நானாக இருப்பதற்கு முயற்சி செய்கிறேன். அதுவும் குறிப்பாக இந்த வீட்டில் நான் நானாக இருப்பது மிக கடினம்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது யாரோ வீட்டுக்குள் வர, “அடடே.. வாங்க.. வாங்க” என்று சொல்லி முடிக்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

பிக்பாஸ் வீட்டைப் பொருத்தவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் தன் இயல்பிலிருந்து மாறாமல், அதே சமயம் அறத்துடனும் ஒழுக்கத்துடனும், இருக்கும் பட்சத்தில் அவர்கள் மக்களால் விரும்பப் படுகிறார்கள். மக்களின் ஓட்டு அவர்கள் இறுதியில் வெற்றியாளராக தீர்மானிப்பதற்காக உதவுகிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 9 அல்லது 9.30 மணிக்கு தொடங்கும்.

ஆனால் இந்த வருடம் அதே நேரத்தில் ஜீ தமிழில் சர்வைவர் போட்டி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் ரவுண்டு வரை சென்று, போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு நேரத்தில் ஒளிபரப்பாகுமா? என்கிற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில், மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியிருக்கின்றன. அப்போ அக்டோபர் 3-ஆம் தேதி முதல் மாலை 6 மணியில் இருந்து சரவெடிதான்.

Also Read: "கண்ணம்மா நல்லவ.. தப்பு என்மேல தான்..".. குற்ற உணர்ச்சியில் குமுறி அழுத பாரதி..  ‘என்ன சிட்டி இப்படில்லாம் பேசுது?’ - ‘ஷாக்’ ஆன வெண்பா!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan BiggBoss5 new promo with streaming date vijay tv

People looking for online information on Biggboss, BiggBoss5, BiggBossTamil5, BiggBossTamilPromo, Kamal Haasan will find this news story useful.