www.garudabazaar.com

அடேங்கப்பா..! ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல!.. வந்தாச்சு பாருங்க BiggBoss 5வது சீசன் அடுத்த ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, புத்தகம் எதுவும் இல்லாத இந்த வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் எனப்படும் போட்டியாளர்கள் தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்ண வேண்டும். தவிர, வீட்டை சுத்தப்படுத்துதல், கழிவறை, குளியலறை ஆகிய வேலைகளை வீட்டிலிருப்பவர்கள் குழுவாக பிரிந்து செய்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் குட்டி ஹேண்ட்பேகுடன் சேர்ந்த ஒரு மைக்ரோபோன் வழங்கப்பட்டிருக்கும். அதை எப்போதும் ஹவுஸ் மேட்ஸ் மாட்டி இருக்க வேண்டும்.  இந்த வீட்டில் இருக்கும் காலம்வரை ஹவுஸ்மேட்ஸ் ஒரே அறையில் போடப்பட்ட படுக்கைகளில் உறங்கவேண்டும்.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

இப்படிப்பட்ட விதிகளுடன் கூடிய இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் மத்தியில் மிகவும் சென்சேஷனலாக ஒளிபரப்பாகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்திருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களை தொடர்ந்து 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

Also Read: "இளவரசேசச".. "வந்தியத்தேவரே".. Twitter-ல் களைகட்டும் கார்த்தி - ஜெயம் ரவி உரையாடல்! கொண்ட்டாட்டத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்!

இது தொடர்பான இரண்டு அடுத்தடுத்து ப்ரோமோக்கள் வெளிவந்தன. இதில் கடைசியாக வெளியாகிய பிக்பாஸ் 5 வது சீசனில் ப்ரோமோவில், ஒரு திருமண விசேஷ வீட்டுக்குள் கமல்ஹாசன் செல்கிறார். அங்கு முதலில் சந்தோஷமாக இருந்த இரண்டு குடும்பத்தினர், கொஞ்சம் கொஞ்சமாக புரளி பேசி, பொறாமை, வஞ்சகம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என எல்லாவற்றையும் ஒருவருக்கு ஒருவர் மீது கக்கி, கடைசியில் முதலிரவே நின்றுபோவது போல் அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டது.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் இருக்கும் பெட்ரூமில் படுத்துக் கொண்டு, எதையோ படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது யாரோ கிசுகிசு என புரளி பேசும் குரல் அவருக்கு கேட்க, இரண்டு முறை “யாரது.. யாரது கிசுகிசுனு பேசுறது?” என்கிறார்.

பின்னர், “வீட்டுக்குள் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள்.. ஆனால் அவர்கள் பேசுவதை உலகமே கேட்டுக் கொண்டிருக்கிறது” என்று கமல் கூற உடனே பிக்பாஸ் குரல், “யாரது கிசுகிசுனு பேசுறது” என கேட்கிறது. அப்போது கமல் சைலன்டாக , “நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள்” என்பது போல் செய்கை மொழியால் காட்டி விட்டு படுத்து விடுகிறார். இப்படி ஒன்றுக்கொன்று சளைக்காத ப்ரோமோவை அடுத்தடுத்து வெளியிட்டு இருக்கிறார்களே என்று இதுகுறித்து ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஹவுஸ்மேட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் உலகின் பிற தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, இந்த வீட்டில் தங்குவார்கள். சக போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வீட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு  2 பேரை பரிந்துரைப்பார்கள். அப்படி வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு சின்ன பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Also Read: "என்னது?.. அப்படி இல்லயா?".. Elimination விவகாரத்தில் கடைசி நிமிடத்தில் ஆக்‌ஷன் கிங் கொடுத்த சென்சேஷனல் Twist என்னனு தெரியுமா?!

அதில் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேற்றப்படுவாரா? அல்லது உள்ளேயே இருக்கலாமா? என்பதை மக்களின் ஓட்டு தீர்மானிக்கும். கடைசியில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 3 அல்லது 4 பேரில் யார் வெற்றியாளர் என்பதை பொதுமக்களின் வாக்கெடுப்பு தீர்மானிக்கும் என்பது போல் இந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் வரை செல்லும்.

அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 4 சீசன்களில், முதல் சீசனில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 98 நாட்கள் நடந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார். பின்னர் சீசன் 2, சீசன் 3 மற்றும் சீசன் 4 ஆகியவற்றில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 105 நாட்கள் நடந்த இந்த 2,3,4 ஆகிய சீசன்களின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2வது சீசனில் ரித்விகா, 3வது சீசனில் முகேன் ராவ், 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றனர்.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் விஜய் டிவி பிரியங்கா, பிரபல நடிகை பிரியாராமன், இவர்களைத் தவிர மலேசிய மாடல் வெனேசா க்ரூஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

எனினும் பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீரியல் நடிகை ஜெயலக்‌ஷ்மி.. "வட்டி பணம் கேட்டு மிரட்டுறாங்க!!".. சென்னையை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார்!! ஜெயலக்‌ஷ்மி சொன்ன Exclusive விளக்கம்!

BiggBosstamil5 new kisu kisu promo Kamal Haasan பிக்பாஸ்

People looking for online information on BiggBossTamil5BiggBossTamilSeason5KamalHaasan, Kamal Haasan, Trending, VijayTelevision will find this news story useful.