www.garudabazaar.com

நாக்கை துருத்தி.. "தெறிக்க விடுறாங்களே!".. fans-அ கைலயே புடிக்க முடியல!.. 'பேக் ஸ்டோரி' என்ன தெரியுமா?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இணையத்தில் வைரலாகும் ஒரு புகைப்படத்தை கண்டு சமீபத்தில் ரசிகர்கள் படு குஷியாக ஆகி இருக்கிறார்கள் என்று சொன்னால் அது நிச்சயம் திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் அண்மையில் கலந்துகொண்ட பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான்.

trisha samantha keerthi suresh viral party pic video

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பிரபல இயக்குனர் செல்வராகவன் அறிமுக நாயகனாக நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான், செல்வராகவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி இருந்த கீர்த்தி சுரேஷ், தன்னுடைய கிரைம் பார்ட்னர் என்று சாணி காயிதம் படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

trisha samantha keerthi suresh viral party pic video

திரிஷாவை பொருத்தவரை இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது குறித்து கடந்த வாரம், நடிகர் கார்த்தி தம்முடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு, “இளவரசி நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது!” என்று குறிப்பிட்டு திரிஷாவை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். அவருடைய ட்வீட்டிலிருந்து இளவரசியாக திரிஷா நடிப்பது ஊர்ஜிதமாகிறது.

trisha samantha keerthi suresh viral party pic video

இதேபோல் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

trisha samantha keerthi suresh viral party pic video

இந்த நிலையில்தான் நடிகை சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் பங்குபெறும் குட்டி பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதில் ஆளுக்கு ஒரு ரோஜாப்பூவை கையிலும் காதிலும் வைத்துக்கொண்டு இவர்கள் கூட்டாக போஸ் கொடுத்து இருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன. இதேபோல் கீர்த்தி சுரேஷூம், சமந்தாவும் நாக்கை துருத்திக் கொண்டு தாறு மாறாக ஒரு குட்டி பூமராங் வீடியோ போன்ற போஸை கொடுத்திருக்கின்றனர்.‌

trisha samantha keerthi suresh viral party pic video

இந்தப் புகைப்பட வரிசையில் சமந்தா தன்னுடைய படுக்கை அறையில் தன்னுடைய புதிய வளர்ப்பு பப்பி நாய் குட்டியுடனும், ஏற்கனவே வளர்த்துவரும் செல்ல நாயுடனும் அழகான ஒரு செல்ஃபியை பதிவிட்டிருக்கிறார்.

இந்த இரண்டு செல்ல நாய்களும் சமந்தாவின் செருப்பை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் இழுத்துக்கொண்டு க்யூட்டாக சண்டைபோடும் வீடியோவையும் சமந்தா பதிவிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து இருக்கின்றனர்.

trisha samantha keerthi suresh viral party pic video

இந்த புகைப்படத்தில் இடம் பெறாத நயன்தாரா, அவரது ரசிகர்களால் பெரிதும் மிஸ் பண்ணப்படுகிறார். நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார்.

trisha samantha keerthi suresh viral party pic video

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா திரையில் தோன்றவிருக்கும் இந்த காம்போவை பார்ப்பதற்கே பலரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில், தற்போது டூ டூ டூ பாடல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

trisha samantha keerthi suresh viral party pic video

இதனிடையே நடிகை நயன்தாரா, நேரம், பிரேமம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரித்திவிராஜ் நடிப்பில் இயக்கும் கோல்டு திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

trisha samantha keerthi suresh viral party pic video

இதேபோல் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இணைந்து விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா மீண்டும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில்,  விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து நடிப்பது பலரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தான் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “மிகவும் அருமையான ஒரு மாலை .. இந்த வாரத்தில்” என்று சொல்லி திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து டேக் செய்துள்ளார். ஆம், இவர்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாக்கை துருத்தி.. "தெறிக்க விடுறாங்களே!".. FANS-அ கைலயே புடிக்க முடியல!.. 'பேக் ஸ்டோரி' என்ன தெரியுமா?! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

trisha samantha keerthi suresh viral party pic video

People looking for online information on Gold, Kaathuvaakula Rendu Kaadhal, Kalyani Priyadarshan, Keerthi Suresh, Maanaadu, Ponniyin Selvan, Saani Kaayidham Tamil, Samantha, Trending, Trisha, Viral will find this news story useful.