www.garudabazaar.com

போடு!.. இளம் பிக்பாஸ் நடிகர்.. 4 வாரத்துல ஒடம்ப எப்படி ஆக்கி இருக்காரு பாருங்க.. வேறலெவல் transformation!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பிரபலமானவர் தர்ஷன்.

biggboss tharshan 4 week transformation viral photo தர்ஷன்

ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு சரியென பட்டதை நேர்மையாக பேசி விளையாடினார். இதனாலேயே ரசிகர்களின் பேராதரவை தர்ஷன் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கமலே குறிப்பிட்டு பாராட்டினார்.

இதனிடையே தமது சக பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியாவுடன் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர்களும் வெளியாகி வரவேறைப் பெற்றன.

மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தர்ஷனும் லாஸ்லியாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். 

இப்படத்தை தயாரித்து, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.  கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இணைந்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்க, நடிகர்கள் மனோ பாலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள தர்ஷன், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் 4 வாரத்துக்கு முன்பு எடுத்த போட்டோவையும், தற்போது எடுத்த போட்டோவையும் ஒன்றாக ஒப்பிட்டு தர்ஷன் ஷேர் செய்துள்ளார்.

அந்த பதிவில் நடிகர் தர்ஷன், 4 வாரத்தில் 8 கிலோ எடையை குறைத்துள்ளதாக பதிவிட்டுள்ளதுடன், 4 வார ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்றும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Also Read: அடேங்கப்பா..! ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல!.. வந்தாச்சு பாருங்க #BiggBoss 5வது சீசன் அடுத்த ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

biggboss tharshan 4 week transformation viral photo தர்ஷன்

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5, Google Kuttappa, Koogle Kuttappa, Losliya, Tharshan thiyagarajan, Trending, VijayTelevision will find this news story useful.