அட்ரா சக்க.. BiggBoss வீட்ல "மைனா" சூஸனா? ..உண்மை என்ன? அவரே பகிர்ந்த Viral பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் இதுவரை நிறைவடைந்து இருக்கின்றன.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக வெகுஜன மக்களிடையே ஹிட் அடித்தது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வரவிருக்கிறது. இதுதொடர்பான புரோமோ அண்மையில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் இணைவதற்கு வாய்ப்பு உண்டு என்கிற பேச்சுகள் பல எழுந்து வருகின்றன.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை சூஸன் கலந்து கொள்வாரா என்கிற கேள்வியுடன் தொடர்ச்சியாக மீம்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் மற்றும் அமலாபால் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இந்த திரைப்படத்தில் காவலரின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சூஸன்.
இதேபோல் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான ராட்சசன் திரைப்படத்திலும் சூஸன் காவலர் கேரக்டரில் மிரட்டியிருந்தார். இவர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பல வகையான மீம்கள் உருவாகி வந்திருக்கின்றன.
இதை அவரே தமது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்து, “ஒருவேளை இருக்குமோ?” என்று கேள்விகேட்டு பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் அனுமான பட்டியலில் விஜய் டிவி பிரியங்கா, சீரியல் நடிகை பவானி ரெட்டி, நடிகை மைனா நந்தினி உள்ளிட்டோரின் பெயர்களும் ரசிகர்களால் பேசப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அட்ரா சக்க.. BIGGBOSS வீட்ல "மைனா" சூஸனா? ..உண்மை என்ன? அவரே பகிர்ந்த VIRAL பதிவு! வீடியோ