நாயகன், கலைஞர் கருணாநிதியின் பெண் சிங்கம், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஸ் இவர் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார்.
![Actor and Former Lok Sabha MP JK Rithesh Passes Away at 46 Actor and Former Lok Sabha MP JK Rithesh Passes Away at 46](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-and-former-lok-sabha-mp-jk-rithesh-passes-away-at-46-photos-pictures-stills.jpg)
சமீபத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் இவர் நடித்த 'எல்கேஜி' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதில் அரசியல்வாதியாக மிடுக்கான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் பேசிய வசனங்களுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜே.கே.ரித்தீஸ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஸ் மரணம் வீடியோ