www.garudabazaar.com

"Wig ஒட்டிட்டு வரணும்ல".. ஷிவினை பற்றி கதிரிடம் அசிம் பரபரப்பு பேச்சு..! Bigg Boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Azeem and kathiravan about shivin wig bigg boss house

இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

Azeem and kathiravan about shivin wig bigg boss house

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இதே போல விக்ரமன் மற்றும் கதிரவன் ஆகியோரின் பெற்றோர்களும், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் வருகை புரிந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.

இதற்கு மத்தியில், ஷிவின் குறித்து அசிம் பேசி உள்ள விஷயங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அசிம், கதிரவன் உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, "ஷிவின் பாத்ரூம் போய் 3 மணி நேரம் ஆச்சா?" என அசிம் கேட்கிறார். அப்போது ஒன்றரை மணி நேரம் என அருகே இருக்கும் போட்டியாளர்கள் சொல்ல, தொடர்ந்து பேசும் அசிம், "இந்த விக் எல்லாம் கழட்டி ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வர டைம் ஆகும்" என் அசிம் கூறுகிறார்.

Azeem and kathiravan about shivin wig bigg boss house

தொடர்ந்து, அவரும் கதிரவனும் பேசி கொண்டிருக்க, விக் எல்லாம் கழற்றி பேஸ்ட் போட்டு ஒட்டுவதாக குறிப்பிடும் அசிம், நான் குளிக்க போனால் 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றும் குறிப்பிடுகிறார். ஷிவின் விக் வைத்தாக குறிப்பிட்டு அசிம் பேசிய விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and kathiravan about shivin wig bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Shivin will find this news story useful.