Breaking: வெங்கட் பிரபு, காஜல் அகர்வாலுடன் இணையும் தொடருக்கு டைட்டில் இதுவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு , சிம்புவை வைத்து இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Venkat Prabhu and Kajal Aggarwal, Vaibhav' Web Series Title is Live Telecast

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் வைபவ், காஜல் அகர்வால், யோகி பாபு, கயல் ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வெப் சீரிஸை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருப்பதாக சொல்லப்படும் இந்த வெப் சீரிஸுக்கு லைவ் டெலிக்காஸ்ட் (Live Telecast) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Entertainment sub editor